இலங்கையில் யுவதியொருவரின் தலை துண்டிக்கப்பட்டு ஒரு சில நாட்களே ஆன நிலையில், அயல் நாட்டிலும் அவ்வாறான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசம் பகுதியில் நபரொருவர் தனது மகளின் தலையை துண்டித்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் தனது மகளின் தலையை துண்டித்து, வீதியில் எடுத்து வரும் காட்சியை கண்டு பிரதேச மக்கள் அச்சம் கொண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
தனது 17 வயதான மகளையே, தான் கொலை செய்துள்ளதாக குறித்த நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த யுவதியின் சடலம், அவரது அறையில் காணப்படுவதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தனது மகள் தனது விருப்பத்திற்கு மாறாக, இளைஞர் ஒருவரை காதலித்து வந்த சம்பவத்தின் காரணமாகவே இந்த கொலையை தான் செய்துள்ளதாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
Discussion about this post