இறக்குவானையில் கொவிட் தொற்று பரவுவதற்கான அபாயம் அதிகளவில் காணப்படுவதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இறக்குவானையில் இதுவரை மூவர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரி தெரிவிக்கின்றார்.
திருகோணமலை மரண வீடொன்றிற்கு சென்ற தரப்பினரே, இவ்வாறு கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
நாடு முழுவதும் காணப்படுகின்ற கொவிட் அச்சுறுத்தலை போன்றே, இறக்குவானையிலும் கொவிட் அச்சுறுத்தல் அதிகம் என அவர் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post