ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவருடன் நெருங்கி பழகியமையினால், தானும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
தான் உள்ளிட்ட மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், விரைவில் கொவிட் பரிசோதனைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மானிற்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று எதிர்க்கட்சித் தலைவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நெருங்கி பழகிய பாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக கொரோனா பரிசோதனைகளை செய்யுமாறு படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
Discussion about this post