எதிர்வரும் 7ம் திகதிக்கு பின்னர் நாடு திறக்கப்படுமாக இருந்தால், தேசிய அடையாளஅட்டை நடைமுறையின் பிரகாரமே வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
பிரபல சிங்கள பத்திரிகையான அருண பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாடு திறக்கப்பட்டதன் பின்னர், வேலைகளுக்கு செல்வோருக்கு வழமை போன்று அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வேலைக்கு செல்லாத ஏனையோருக்கு அடையாள அட்டை நடைமுறையின் பிரகாரமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, 7ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாட்டை தொடர்வது குறித்து இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் செயலணி மற்றும் சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியே, எதிர்கால தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அடையாளஅட்டையின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாக இருக்குமாக இருந்தால், ஒற்றை திகதிகளிலும், அடையாளஅட்டையின் இறுதி இலக்கம் பூஜ்ஜியம் அல்லது இரட்டை இலக்கமாக இருக்குமாக இருந்தால், இரட்டை இலக்க திகதிகளிலும் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும். (Aruna)
Discussion about this post