எதிர்வரும் பண்டிகை காலத்தில் தேவை ஏற்படுமாயின், பயண கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
கடந்த நத்தார் தினத்தின் பின்னரான காலத்தில், நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றாமையே, கொவிட் தொற்று அதிகரிப்பதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நத்தார் காலப் பகுதியின் பின்னர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)
Discussion about this post