2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. (TrueCeylon)