2027ஆம் ஆண்டு மற்றும் 2031ம் ஆண்டு ஒரு நாள் சர்வதேச உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குப்பெறும் அணிகளின் எண்ணிக்கையை 14ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன், இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்
கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 20ஆக அதிகரித்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
2024 – 2030ம் வரை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post