பொகவந்தலாவ சிறிபுர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்றால் மனைவி உயிரிழந்த 3 நாட்களுக்கு பின்னர் நேற்று (16) இரவு கணவரும் உயிரிழந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தாயான 68 வயதான பெண் கடந்த 13 ஆம் திகதி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அன்றைய தினமே உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றைய தினமே வெளியாகியிருந்தன.
அதில் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அவரது கணவரான 76 வயதான எஸ். வடிவேல் உயிரிழந்துள்ளார்.
அவர் தொடர்பிலும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருவரின் சடலங்களும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த குடும்பத்தில் உள்ள ஏனைய 6 அங்கத்தவர்களும் தற்போது சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post