கொரோனா தொற்றினால் நீண்டகாலம் முடக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கொழும்பு -15 மட்டக்குளி பகுதியில் வசிப்போருக்கான உலர் உணவுப் பொருட்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் HR FOUNDATION அமைப்பின் தலைவரும், கொலன்னாவ மஸ்ஜித் பெடரேஷனின் தவிசாளருமான திரு பெரோஷ் மொஹமட், கொலன்னாவ மஸ்ஜித் பெடரேஷனின் உதவி செயலாளர் மொஹமட் ஹில்ஹாம், வெல்லம்பிட்டிய மஸ்ஜித்தின் தவிசாளர் மொஹமட் மொஹைதீன், HR FOUNDATION அமைப்பின் உறுப்பினர் அல்-ஹாஜ் ராபீக் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மோட்சம் அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அமைப்பின் ஏனைய கௌரவ உறுப்பினர்களும் நிவாரணப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
கொரோனா காலப்பகுதியில் கொழும்பு -15 மட்டக்குளி ஶ்ரீ கல்யாணி கங்காராம பகுதியில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு மோட்சம் அமைப்பினரால் மூன்றாவது முறையாக HR FOUNDATION உடன் இணைந்து இம்முறை உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post