நாடு பூராகவும் அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை மறுதினம் (25) அதிகாலை 4 மணியுடன் தற்காலிகமாக தளர்த்தப்பட்டாலும், வழமை போன்று பொதுமக்களுக்கு செயற்பட முடியாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
அத்தியாவசிய பொருள் கொள்வனவு அல்லது மருந்து கொள்வனவிற்காக வீட்டிற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு மாத்திரமே செல்ல முடியும் என அவர் கூறியுள்ளார்.
கொவிட் தொற்று அதிகரித்து வருகின்ற பின்னணியில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்களை பொறுப்புடன் நடந்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை மறுதினம் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு, அன்றைய தினம் இரவு 11 மணி முதல் மீண்டும் எதிர்வரும் 28ம் திகதி அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post