நாட்டில் தற்போது காணப்படுகின்ற அபாய நிலைமையை கருத்திற் கொண்டு, மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளை திறப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்றைய தினம் (27) தீர்மானம் எட்டப்படும் என மத்திய மாகாண பிரதான செயலாளர் காமினி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் (26) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் சில மாணவர்கள் மற்றும் கற்பிக்கும் சில ஆசிரியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிய கிடைக்கின்றது என அவர் கூறுகின்றார்.
இதனால், பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, கொரோனா தடுப்பு குழுவுடனான சந்திப்பிலேயே, பாடசாலைகளை நடத்திச் செல்வது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், இன்றைய தினம் வழமை போன்று பாடசாலைகள் நடத்தப்படும் என அவர் தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post