முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு விடுக்கப்பட்ட பிடியாணை உத்தரவு, சில மணிநேரத்தில் வாபஸ் பெறப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திர, தனது பேஸ்புக் தளத்தில் விளக்கமளித்துள்ளார்.
தான் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், தனது ஒன்றரை மாத குழந்தைக்கு தனது காரில் பால் கொடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேல் நீதிமன்றத்தில் தனது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், தான் நீதிமன்ற வளாகத்திலேயே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த தருணத்திலேயே, தனக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தனது சட்டத்தரணி ஊடாக, தனது விளக்கத்தை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தியதை அடுத்து, நீதவான், பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், குழந்தைகளுடன் நீதிமன்றத்திற்கு வருகைத் தரும் தாய்மார்களுக்கு, தகுந்த இடமொன்று இல்லாமையினால், பல தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தனது பேஸ்புக் பதிவில் விளக்கமளித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்திற்குள் குழந்தைகளுடன் வருகைத் தரும் தாய்மார்களுக்காக, இடமொன்றை அமைத்துக்கொடுக்க நீதி அமைச்சர் அலி சப்ரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிருணிகா பிரேமசந்திர கோரிக்கை விடுக்கின்றார். (TrueCeylon)
අද දින මහාධිකරණයේ මා සම්බන්ධයෙන් නඩු නිමිත්තක් පැවති අතර ගරු විනිසුරුතුමන් නඩුව කැඳවන අවස්ථාවේදී මා අධිකරණ භූමියේ මාගේ…
Posted by Hirunika Premachandra on Wednesday, March 10, 2021
Discussion about this post