கல்வி தொழிற்சங்கங்கள், பத்தரமுல்லை – பெலவத்த பகுதியிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
பெலவத்த பிரதான வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால், குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர், ஆசிரியர்கள், கல்வி நிர்வாக சேவை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் இணைந்துக்கொண்டுள்ளனர்.
அதிபர் மற்றும் கல்வி நிர்வாக சேவையிலுள்ள 5000 வெற்றிடங்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் பழிவாங்கலை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post