நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் மழையுடனான வானிலை, இன்றைய தினமும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழையுடனான வானிலை தொடரும் என திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.
இதேவேளை, நேற்றைய தினத்தை போன்றே, இன்றும் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
நேற்று காலை 8.30 முதல் இரவு 10 மணி வரையான காலப் பகுதியில் ஹொரணை பகுதியிலேயே அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
ஹொரணை பகுதியில் நேற்றைய தினம் 145.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, பிரதான நகரங்கள் உள்ளிட்ட பல தாழ் நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றமையினால், அந்த பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் பிறப்பித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post