சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் அனைத்து சுகாதார வழிகாட்டிகளையும், சட்டமாக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த விசேட வர்த்தமானி எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டியொன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)
Discussion about this post