இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வலபனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதலாவது கிராம உத்தியோகத்தர் இவர் என அவர் குறிப்பிடுகின்றார்.
IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post