ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்தில் தோல்வி அடையவில்லை என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளில் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவே தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆகிய அனைத்திலும் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
கொவிட் ஒழிப்பிற்கு அருந்த கூடாத மருந்து வகையொன்றை அருந்துமாறு கூறும் சஜித் பிரேமதாஸவா வெற்றியடைந்துள்ளார் என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
கொவிட் தொற்றுக்கு மத்தியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்து, நாட்டை பாதுகாப்பான முறையில் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
கொவிட் ஒழிப்பை மாத்திரம் முன்னெடுக்காது, மக்களின் அன்றாட வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.