கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று (01) ஆரம்பமாகின்றன.
இந்த முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை 622,352 மாணவர்கள் எதிர்கொள்வதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவிக்கின்றார்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரண தர பரீட்சைகள், கொவிட் – 19 தொற்று காரணமாக பிற்போடப்பட்டது.
சுகாதார நடைமுறைகளின் கீழ் இன்று பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடு பூராகவும் 4513 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post