பாடசாலை செல்லும்போது மாவட்டங்களுக்கும், மாகாணங்களுக்கும் இடையே போக்குவரத்தை குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி தாம் கல்வி கற்கும் பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று தற்காலிகமாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில், அருகிலூள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.
அத்துடன் ஆசிரியர்களும் மாகாணங்களுக்கிடையே போக்குவரத்தை மேற்கொள்ளாது அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று கற்பிப்பதற்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். (Thamilan.lk)
Discussion about this post