பதுளை – பசறை விபத்தில் பெற்றோரை இழந்து தனிமையாகியுள்ள மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்க தான் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அம்பாறை பிராந்திய தொற்று நோயியல் பிரிவின் நிபுணர் டொக்டர் வஜிர ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
குறித்த மூன்று பிள்ளைகளையும் தன்னிடம் கையளிக்க, குழந்தைகளின் பாதுகாவளர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், அதனைத் தொடர்ந்தே தான் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி பிள்ளைகளை பொறுப்பேற்க முடியும் என அவர் கூறுகின்றார்.
இந்த குழந்தைகளையும் இணைத்துக்கொண்டு, தனது குடும்பத்தை பெரியதோர் குடும்பமாக மாற்ற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தனது குடும்பத்திற்கு புதிய அங்கத்தவர்களின் வருகையை தான் எதிர்பார்த்துள்ளதாகவும், அவ்வாறு இந்த குழந்தைகள் வரும் பட்சத்தில் அது சிறந்ததாக அமையும் எனவும் டொக்டர் வஜிர ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தான் விரைவில் குழந்தைகளின் பாதுகாவளர்களை சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
தான் இந்த குழந்தைகளை கண்டதுடன், மிகுந்த வருத்தம் கொண்டதாக தெரிவித்த அவர், குழந்தைகளின் இனம், மதம், ஜாதி என ஒன்றையும் பார்க்கவில்லை என குறிப்பிட்டார்.
இந்த குழந்தைகளை ஒன்றாக வளர்க்கவே ஆசைப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
குழந்தைகள், தனது பாட்டியிடமிருந்து வருகைத் தரவிரும்பாத பட்சத்தில், அவரிடமிருந்து குழந்தைகளை தான் ஒருபோதும் பிரிக்க போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் இந்த குழந்தைகளை ஒருபோதும் கைவிடாது, பார்த்துக்கொள்வதாகவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
இந்த குழந்தைகள் பெரியவர்களாகும் வரை, அவர்களின் பின்னால் தான் இருப்பதாக அம்பாறை பிராந்திய தொற்று நோயியல் பிரிவின் நிபுணர் டொக்டர் வஜிர ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post