மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி ஆஷிஷ் லதாவுக்கு பண மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
56 வயதுடைய ஆஷிஷ் லதா தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறார். இவர் மனித உரிமை ஆர்வலர்களான ராம்கோபின் – எலா காந்தியின் மகள்.
அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் ராம்கோபின்.
ஆஷிஷ் லதா பண மோசடி செய்ததாக அவர் மீது தொழிலதிபர் ஒருவர் தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்தியாவில் இருந்து சுங்கவரி இல்லாமல் சரக்குகளை இறக்குமதி செய்து தருவதாக சொல்லி, மகராஜ் என்ற தொழிலதிபரிடம் இந்திய மதிப்பில் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2015ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ஆஷிஷ் லதா ஜாமீனில் பெற்றார்.
ஆனாலும் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று நடந்த விசாரணையில் ஆஷிஷ் லதா குற்றவாளி என்று நீரூபிக்கப்பட்டுள்ளதால் டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது.
மேலும், இந்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய முடியாது எனும் நிபந்தனையுடன் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது
Discussion about this post