கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை உரிய திகதியில் நடத்த முடியுமா?என்பது தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.
கொவிட் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 27ஆம் திகதி வரை பரீட்சைகளை நடத்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.