உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். தற்போது எமக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தேவைப்படுவதேயாகும்.
டொலர்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கையின் பணம் தேவைப்படுகின்றது. எரிபொருள் கொள்வனவுக்கு எமக்கு தேவையான ரூபாய்கள் எங்களிடம் இல்லை. நாங்கள் அதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம்.
இலங்கையின் எண்ணெய் தேவை சுமார் 40% குறைந்துள்ளது என்றும் கூறினார்.(TrueCeylon)