கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், பாதுகாப்பு பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதேபோன்று, மாகாணத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும், மாலை 6 மணிக்கு பின்னர் மூடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் 6 மணிக்கு பின்னர், நகருக்குள் பிரவேசிக்குமாறும், தேவையற்ற விதத்தில் நகரத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு அரண்களை அமைத்து, தேவையற்ற விதத்தில் மக்கள் நடமாடுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர், பாதுகாப்பு பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Discussion about this post