மாலைத்தீவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் மாலைத்தீவு பாராளுமன்றத்தின் சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷிட் காயமடைந்துள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த மொஹமட் நஷிட், வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலைத்தீவு தலைநகர் மாலேயிலுள்ள அவரது வீட்டிற்கு அருகிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post