எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப் பகுதியை இலக்காக கொண்டு, புதிய சுகாதார வழிகாட்டியொன்றை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
தொற்று நோய் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், புதிய சுகாதார வழிகாட்டி மீண்டுமொரு முறை மாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார சட்டங்களை தளர்த்தும் விதத்தில், மக்கள் பொறுப்புடன் அந்த சட்டங்களை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு மக்கள் செயற்படாத பட்சத்தில், கடந்த காலங்களில் காணப்பட்ட விதத்தில் சுகாதார சட்டங்கள் வலுப்படுத்தப்படும் எனவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post