நியூஸிலாந்தில் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், முழு நாட்டையும் முடக்குவதற்கு அந்த நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுமார் ஆறு மாதங்களின் பின்னர், முதல் முறையாக நியூஸிலாந்தில் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, நியூஸிலாந்தை மூன்று நாட்களுக்கு முடக்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட ஆக்லாந்தை, தொடர்ச்சியாக ஒரு வார காலத்திற்கு மூட தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நாடாக, நியூஸிலாந்து பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post