ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்திற்காக ஐவர் அடங்கிய குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நியமித்துள்ளார்.
இதன்படி, கிரிக்கெட் சபைக்கான தேர்தல் நடத்தப்படும் வரை, இந்த ஐவர் அடங்கிய குழுவிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த குழுவின் பிரதம அதிகாரியாக கலாநிதி அர்ஜுன டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் உறுப்பினர்களாக எஷ்லி டி சில்வா, சுஜீவ முதலிகே, உச்சித்த விக்ரமசிங்க, அமல் எதிரிசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post