கிரிபத்கொட நகர் மத்தியிலுள்ள கட்டிடத் தொகுதியொன்றில் பரவிய தீயினால், இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இணையவழி ஊடக நிறுவனமான LIVE24 ஊடக நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிபத்கொட நகர் மத்தியிலுள்ள UDESHI CITY கட்டிடத் தொகுதியில் இன்று (17) காலை தீ பரவியது.
நான்கு மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்த நிதி நிறுவனத்திற்கு, தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவது மாடியில் அமைந்திருந்த LIVE24 ஊடக நிறுவனத்திற்கும், தீயினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
LIVE24 இணைய வழி ஊடக நிறுவனத்தை மற்றுமொரு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post