எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் நாட்டின் கடல் வளங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் ஆய்வு செய்து, சட்ட மாஅதிபர் ஊடாக, உரிய கப்பல் நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனம் ஆகியவற்றுக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக சமுத்திர வர்த்தக செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன தெரிவிக்கின்றார்.
நட்டஈட்டை ஈடு செய்வதற்கு கப்பல் நிறுவனம் முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தீ பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து ஆய்வுகளை நடத்தி, அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறு அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பிரகாரம், நட்டஈட்டை வழங்க அந்த நிறுவனம் தயாராகவுள்ளது என அவர் கூறுகின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
Discussion about this post