இலங்கையில் இடம்பெற்ற போராட்டங்களினால் 17 கப்பல்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறிய கப்பல்களை மீள அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சில கப்பல்களை மாத்திரமே மீள கொண்டு வர முடிந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டிற்கு கிடைக்கும் வருமானங்களை இழப்பதே, போராட்டங்களின் பெறுபேறாக அமைவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். (TrueCeylon)