திருகோணமலை – கல்மெட்டியாவ, வடக்கு ஈச்சங்குளம் காட்டுப் பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ – வடக்கு ஈச்சங்குளம் காட்டுப் பகுதியை அண்மித்த பகுதியில் நேற்று (08) குறித்த யானையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் எட்டு அடி உயரமான இரண்டரை அடி நீளம் கொண்ட தந்தத்தை உடைய ஆண் யானையே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு குறித்த யானை, பன்றிக்கு வைத்த வெடிபொருளை உட்கொண்டமையால் உணவு உண்ண முடியாது உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வனஜீவராசி அதிகாரிகளுடன் இணைந்து தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post