உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் மாதம் 9ம் திகதி நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்களை மேற்கோள்காட்டி மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், அரச அச்சகத் திணைக்களத்திற்கும் இடையிலான சர்ச்சையினால் தபால்மூல வாக்களிப்பு திகதிகள் ஒத்தி வைக்கப்பட்டமை மற்றும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை வழங்க முடியாதுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தமை ஆகிய காரணங்களினால் தேர்தலை மார்ச் 9ம் திகதி நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரம் பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அதில் தேர்தல் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்ட தேதியில் நடத்த முடியாதா என ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவிய போது, நிதி ஒதுக்கீடு பெறவில்லை என்றால் தேர்தலை நடத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)