ஈ.ஏ.பி மற்றும் சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜீவக எதிரிசிங்க, அஞ்ஜலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈ.ஏ.பி மற்றும் சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபையை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யாது, சட்ட விரோதமான முறையில் நிதி செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் 2011ஆம் ஆண்டு 41ஆம் இலக்க நிதி சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்த பின்னணியிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post