அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தமது கடமைகளுக்கு செல்லும் போது விசேட அனுமதிப் பத்திரம் எதுவும் விநியோகிக்கப்படாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
எனினும், தமது பணிகளுக்கு செல்வதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சோதனை சாவடிகளில் காண்பித்து, பணிக்கு செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் பொருந்தும் என இராணுவ தளபதி கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post