ஹிங்குராக்கொட – மின்னேரிய வீதியில் இன்று (13) காலை பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த வர்த்த நிலையம் ஒன்றின் மீது மோதியது.
இதையடுத்து, பிரதேசவாசிகள் சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மின்னேரிய பேருந்து தரிப்பிடத்திலிருந்து, சுமார் 4 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த மறுகனமே, இந்த பேருந்து விபத்துக்குள்ளான நிலையில், அதிஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.(TrueCeylon)