வைரஸ் தொற்றில் இருந்து 100% தனி நபரும் அவர் சார்ந்த சமூகம் விடுதலை அடைவதற்கான அணுகுமுறையை வைத்தியர். சி. யமுனாநந்தா
தெரிவித்துள்ளார்.
1. முகக்கவசம் அணிதல் – 10%
2. சமூக இடைவெளி பேணல் – 10%
3. கைகளை அடிக்கடி கழுவுதல் – 10%
4. பயணங்களைத் தவிர்தல் – 10%
5. சனத்திரள் மிக்க இடங்களைத் தவிர்த்தல் – 10%
6. ஒன்றுகூடலைத் தவிர்த்தல் – 10%
7. தூய்மி பாவித்தல் – 10%
8. போசாக்குள்ள உணவுகளை உண்ணல் – 10%
9. தடுப்பு மருந்து ஏற்றுதல் – 10%
10. குளிரூட்டப்பட்ட இடங்களைத் தவிர்த்தல் – 10%
மேற்கூறிய 10 முறைகளைக் கடைப்பிடித்தால் வைரஸ் தொற்று ஏற்படுவதனை 100% தவிர்க்கலாம். ஏனையவர்களுக்கும் தீநுண்மிப் பரவுதலை 100% தடுக்கலாம்.
மேலும் நோய் அறிகுறி உடையவர்கள் வீடுகளில் தனிமையில் அதாவது 12 நாட்கள் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டால் அதாவது தனிமைப்படுத்திக் கொண்டால் நோய் ஏனையவர்களுக்குத் தொற்றாது.
அன்று பாரதத்தில் துரியோதனின் கொடுமையால் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டனர். ஆனால், தற்போதைய தீநுண்மிக்கு 12 நாட்கள் மட்டுமே அஞ்ஞாதவாசம் தேவை.
வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றபோது அவர்களை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு போதிய இடவசதிகள் இருக்காது.
எனவே இந்த அபாயத்தினை உணர்ந்து இரண்டு கிழமைகள் சுய தனிமைப்படுத்தலை ஒவ்வொரு குடும்பமும் மேற்கொள்ளும் போது நோப்பரம்பல் குறையும். தேவையற்ற விதத்தில் நண்பர்களின் வீடுகள் உறவினர் வீடுகளுக்குச் செல்வதனைத் தற்போது தவிர்த்தல் நல்லது.
நோயாளர் தொகை அதிகரிக்கும்போது மருத்துவ ஆளணிப் பற்றாக்குறை ஏற்படும். இச் சந்தர்ப்பத்தில் சித்த மருத்துவத் துறையினரது உதவியினையும் முழுமையாகப் பயன்படுத்தல் வேண்டும்.
நோய் அறிகுறியற்ற தொற்றாளர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வசதிகள் அளிக்கப்படலாம். இதற்கு காசநோயக் கட்டடுப்பாட்டில் பயன்படுத்திய நேரடிக் கண்காணிப்பிலான சிகிச்சை முறையினைப் பயன்படுத்தலாம்.
வைரஸ் பிடியில் இருந்து மீட்சிபெற நாம் ஒவ்வொருவரும் திட சங்கற்பம் பூணுவோம்.
Discussion about this post