கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் சமூகத்தில் சேர வேண்டாம் என்று தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதில் கலந்துகொள்வதற்கு முன்பாக இந்த தகவலை ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ளார்.
Discussion about this post