விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் 5 ரூபாவை கட்டணமாக பெற்று, விஜய் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கியது திரைப்படத்திற்கு உண்மையானாலும், நிஜத்தில் அது சாத்தியமற்றது என பலரும் கூறியிருந்தனர்.
எனினும், இன்று நிஜத்தில் அது உண்மையாகியுள்ளது.
இந்தியாவில் கொவிட் நோயாளர்களுக்கு 10 ரூபாவை கட்டணமாக அறவிட்டு சிகிச்சை அளிக்கும் வைத்தியர் ஒருவர் தொடர்பில் ANI செய்தி முகாமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் ஐத்ராபாத்தைச் சேர்ந்த டொக்டர் விக்டர் இமானுவேல், தெலுங்கானாவில் 10 ரூபாவிற்கு சிகிச்சைகளை வழங்கி வருகின்றார்.
10 ரூபாவை பெற்று, கொவிட் தொற்றாளர்களுக்கே இவர் சிகிச்சைகளை அளித்து வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, 2020ம் ஆண்டு 20,000 முதல் 25,000 வரையான கொவிட் தொற்றாளர்களுக்கு இவர் சிகிச்சைகளை வழங்கியுள்ளதாக ANI செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post