மீஹகாவத்த – தெல்கொட பகுதியில் தோஷத்தை நீக்குவதாக கூறி 9 வயதுச் சிறுமி ஒருவர் பலமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சிறுமிக்கு தோஷம் நீக்க வேண்டும் என தீர்மானித்த பெற்றோர் பூசகர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
பூசகரும் தோஷம் நீக்குவதாக தெரிவித்து தடி ஒன்றினால் சிறுமியை தாக்கியதில் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுமியை பியகம மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் பின்னர் குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பூசகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (TrueCeylon)
Discussion about this post