கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில் 20 முதல் 30 சதவீதம் வரையான தொற்றாளர்களுக்கு கொவிட் டெல்டா வைரஸ் தொற்று காணப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
நாடு பூராகவும் பெற்றுக்கொண்ட மாதிரிகளை ஆய்வு செய்ததன் ஊடாக இந்த விடயம் தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
கொழும்பில் 10 மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 2 முதல் 3 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்களாயின், அதனை 30 சதவீதமாக எண்ண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், கொழும்பில் 20 முதல் 30 சதவீத டெல்டா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post