இரண்டாம் இணைப்பு
கொவிட் தொற்றினால் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு− ஓட்டமாவமடி பகுதியில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த பகுதியில் 9 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதலாம் இணைப்பு
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளன.
அதன்படி கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்த இருவரின் சடலங்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட உள்ளன.
இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார்.
இதேவேளை பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உடல்கள் அடக்கம் செய்யப்பட உள்ளது.
Discussion about this post