இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தசுன் ஷானக, தனக்கு நாட்டில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் கருத்து வெளியிட்ட அவர்,
“ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எனது படம் பரப்பப்படுவதை கவனித்தேன்.
ஆனால் எனக்கு எந்தக் கட்சியுடனும் தொடர்பில்லை. நான் எந்த கட்சியின் கூட்டத்திலும் பிரதிநிதியாக பங்கேற்றதுமில்லை. எனது உண்மையான அன்பும் ஆர்வமும் எனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவதுதான்” என்று ட்வீட் செய்துள்ளார்.(TrueCeylon)