இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கடந்த 11 நாட்களாக இடம்பெற்ற மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருதரப்பினரும் யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த நிலையிலேயே, மோதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்தின் தலையீட்டுக்கு மத்தியிலேயே, இரண்டு நாடுகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எகிப்து அதிகாரிகள், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பிரதிநிதிகள் மற்றும் இஸ்ரேல் படையினர் ஆகியோருக்கு மத்தியில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்த 11 நாட்களில் மாத்திரம் 233 பாலஸ்தீன பிரஜைகள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 65 சிறார்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், காஸா எல்லையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் 12 இஸ்ரேல் பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
Discussion about this post