நாடு முழுவதும் வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் கொவிட் தொற்றாளர்களில் இதுவரை எவரும் உயிரிக்கவில்லை என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவிக்கின்றார்.
வீடுகளில் இதுவரை 14,278 கொவிட் தொற்றாளர்களை தாம் பராமரித்ததாகவும், அவர்களில் 4,433 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு வீடுகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 359 பேர் அவசர நிலைமை காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், வீடுகளில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post