நாட்டில் இளைய சமூகத்திற்கு மத்தியில் தற்போது கொவிட் தொற்று அதிகரித்து வருவதை காண முடிகின்றது என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.
நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளாந்தம் சடுதியாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில், கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும், நாட்டிற்குள் இதற்கு முன்னர் இல்லாத, புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவுகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம் உள்ளதாகவும், அது தொடர்பில் இந்த வார இறுதியில் அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post