கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன் ஊடாக மலட்டுத்தன்மை ஏற்படும் என வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் நிலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன் ஊடாக மலட்டுத்தன்மை ஏற்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படுவதன் ஊடாக மலட்டுத்தன்மை ஏற்படும் என பரவிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், செயற்படும் விதம் குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசியின் ஊடாக நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் சிறந்த முறையில் உடலில் ஏற்பட்டு வருவதாகவும் பேராசிரியர் நிலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.
Discussion about this post