ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார மற்றும் அவரது மனைவிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ{மானுக்கும் அண்மையில் கொவிட் தொற்று உறுதியாகியது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரனுக்கும் அண்மையில் கொவிட் தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post