சிரேஷ்ட ஊடகவியலாளர் இந்திக்க ஸ்ரீ அரவிந்தவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திக்க ஸ்ரீ அரவிந்த, பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அந்த வைத்தியசாலையிலிருந்து சில படங்ளை வெளியிட்டுள்ளார்.
பாணந்துறை வைத்தியசாலையில் இந்திக்க ஸ்ரீ அரவிந்த அனுமதிக்கப்பட்டுள்ள வாட்டில் 12 கட்டில்கள் மாத்திரமே காணப்படுகின்ற நிலையில், அந்த வாட்டில் மாத்திரம் சுமார் 25 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திக்க ஸ்ரீ அரவிந்த கட்டில் இன்றி, வைத்தியசாலையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்திக்க ஸ்ரீ அரவிந்தவின் குறித்த படங்கள் டுவிட்டர் தளத்தில் வெளியாகியுள்ள பின்னணியில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பதில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து, நோயாளர்களுக்கு கட்டில்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் டுவிட்டரில் பதில் பதிவொன்றை பதிவேற்றியுள்ளார். (TrueCeylon)
Thank you for bringing this up. I will inform the relevant authorities of this. I am certain we can arrange some beds for these patients.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 22, 2021
Discussion about this post