இரத்த பரிசோதனையின் ஊடாக கொவிட் தொற்றாளர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் புதிய நடைமுறையொன்றை பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் இலங்கையரான கலாநிதி நிலிகா மலவிகே தலைமையிலான குழுவே இதனை கண்டுபிடித்துள்ளது.
விரலிலிருந்து எடுக்கப்படும் ஒரு துளி இரத்தத்தின் ஊடாக கொரோனா வைரஸை அடையாளம் கண்டுக்கொள்ள முடியும்.
இந்த நடைமுறையானது, மிக விரைவாகவும், இலகுவாகவும் செய்யக்கூடிய ஒன்று என கூறப்படுகின்றது.
இந்த ஆய்வு நடவடிக்கைகளில் இலங்கை, தாய்வான், இந்தியா, தாய்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிபுணர்கள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பகட்ட பரிசோதனைகள் வெற்றியளித்துள்ளன. (HIRU NEWS)
Discussion about this post